விவாகரத்து விவகாரம்... அவ்வளவு WORTH இல்ல... விஜய் பரபரப்பு வீடியோ!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மனுவில், குடும்பத்தில் ஏற்பட்ட மனஉளைச்சல் குறித்து சங்கீதா குறிப்பிட்டதாகவும், குழந்தைகளுக்கான வாழ்வாதார உதவி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் .
#Watch | "அவ்ளோ Worth-லாம் கிடையாது" - விவாகரத்து வழக்கு குறித்து விஜய் பேச்சு#SunNews | #TVKVijay | #Vijay | #Divorce pic.twitter.com/2MdEmT6TSp
— Sun News (@sunnewstamil) March 7, 2026
மேலும் விவாகரத்து முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் விஜய் ஒரு நடிகையுடன் கலந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியதால் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் விஜய் இதுகுறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்தார். தனது சொந்த பிரச்சனைகளால் ஆதரவாளர்கள் வருத்தப்படுவதை பார்த்தால் தானும் வருந்துவதாக கூறியுள்ளார். அத்துடன் அந்த விஷயங்களை தானே கவனித்து கொள்வேன் என்றும் இனி அனைவரும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
