விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு... அடுத்தடுத்து காரும் விபத்தில் சிக்கியது... பதற வைக்கும் வீடியோ!
மலேசியாவில் நடைபெற்ற 'ஜனநாயகன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கினார். அதன் தொடர்ச்சியாக அவரது கார் விபத்திலும் சிக்கியது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இரவு சென்னை விமான நிலையம் வந்த விஜயைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தின் வெளியேறும் வாயிலில் இருந்து கார் வரை அவர் நடந்து வரும்போது, ரசிகர்கள் முட்டி மோதிக்கொண்டு அவரை நெருங்கினர். கூட்ட நெரிசல் உச்சகட்டத்தை எட்டியபோது, ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் நடிகர் விஜய்யும் நிலைதடுமாறி கூட்டத்தின் நடுவே கீழே விழுந்தார். உடனடியாக அவரது பாதுகாவலர்கள் அவரைத் தூக்கிப் பிடித்துப் பாதுகாப்பாகக் காரில் ஏற்றினர்.
Vijay Car Accident | விபத்தில் சிக்கிய விஜய் கார் #tvkvijay #caraccident #vijay #thanthitv pic.twitter.com/OhTy0UbR0S
— Thanthi TV (@ThanthiTV) December 28, 2025
விஜய் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மற்றொரு விபத்து நேர்ந்தது. அங்கிருந்த மற்றொரு கார் எதிர்பாராத விதமாகப் பின்னோக்கி வந்தபோது, விஜய் அமர்ந்திருந்த காரின் முன்பக்கத்தில் பலமாக மோதியது. இந்த மோதலில் விஜய்யின் காரின் முன்பக்க இண்டிகேட்டர் மற்றும் பம்பர் பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் நடிகர் விஜய்க்கோ அல்லது அருகில் இருந்தவர்களுக்கோ எந்தவிதக் காயமும் ஏற்படவில்லை.

முன்னதாக, மலேசியாவின் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொண்டார். அரசியல் வருகைக்குப் பின் அவர் கலந்துகொண்ட முக்கியத் திரைத்துறை நிகழ்வு என்பதால், சென்னை திரும்பியபோது இந்த அளவிற்குப் பெரிய கூட்டம் திரண்டது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
