விஜய் பட நடிகை ஆமணி பாஜகவில் இணைந்தார்!

 
ஆமனி
 

புதிய காற்று, தீச்சட்டி கோவிந்தன், முதல் சீதனம், பூவே உனக்காக உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பிரபல நடிகை ஆமணி பாஜகவில் இணைந்தார். இவர் தமிழ், கன்னடத்தைவிட தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்தவர்.

பெங்களூருவைச் சேர்ந்த ஆமணி 1992-ல் திரைப்பட துறையில் அறிமுகமானார். ஆந்திராவின் உயரிய நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

நேற்று ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா பாஜக தலைமையகத்தில் மாநில தலைவர் ராம்சந்தர் ராவ் முன்னிலையில் ஆமணி கட்சியில் இணைந்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி  உடன் இருந்தார் . பிரதமர் மோடியின் திறமையான ஆட்சியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்ததாக ஆமணி தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!