பிரபல விஜய் பட நடிகை கர்ப்பம்! ட்விட்டரில் நெகிழ்ச்சி!

 
இலியானா

தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தவர் நடிகை இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில்  பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.  அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் . கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் அவரா இது? என அடையாளம் காண முடியாத அளவுக்கு குண்டாக காணப்பட்டார்.  இந்நிலையில் இன்று காலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், நல்ல செய்தி!! விரைவில் வரவுள்ளது. என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இலியானா

அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதுவரை தனது காதலர் யாரென்ற விவரங்களை வெளியிடவில்லை. அவரது இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவிட்டு வருகின்றனர். வாழ்த்துகள் டார்லிங் என்றும், ஓ மை காட்! வாழ்த்துகள் என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். 

அதில் சிலர் திருமணம் ஆகிவிட்டதா? என்றும் குழந்தைக்கு தந்தை யார் எனவும் கேட்டு உள்ளனர். தயவு செய்து பிற விவரங்களையும் வெளியிட முடியுமா? எனக் கேட்டுள்ளனர். தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இலியானா எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புகைப்பட கலைஞர்  ஆண்ட்ரூ நீபோன் என்பவரின் படத்தை வெளியிட்டு  'எப்போதும் சிறந்த கணவராக இருப்பவர்' என இன்ஸ்டாகிராமில் இலியானா குறிப்பிட்டார். ஆனால், அவர்களுக்கு இடையே திருமணம் நடந்து விட்டதா? என்ற விவரம் எதுவும் இல்லை.  

இலியானா

2019ல் இந்த நட்பு முடிவுக்கு வந்ததாக பதிவிட்டிருந்தார். இதன்பின் சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரரான செபாஸ்டியன் லாரன்ட் மிச்செல் என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசல் ஜோடியுடன் மாலத்தீவில் இலியானாவும் இருந்தார்.  அந்த புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். அதில் கைப்பின் சகோதரர் செபாஸ்டியனுடன் இலியானாவும் இருந்தார்.  நடிகர் அபிஷேக் பச்சனுடன் பிக் புல்  படத்தில் இலியானா நடித்தார். தற்போது அன்பேர் அண்ட் லவ்லி என்ற படத்தில் ரன்தீப் ஹூடா ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web