மருத்துவமனையில் விஜய் பட நாயகி... என்னாச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி!

 
இலியானா

திடீர் உடல்நல குறைவு காரணமாக நடிகை இலியானா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் அறிமுகமானாலும், பல்லாயிரக்கணக்கான தமிழ் திரைப்பட ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை இலியானா. 2006ல் ‘தேவதாசு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான நடிகை இலியானா, அதே ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதன் பின்னர், தமிழ் சினிமா இயக்குநர்கள் நடிகை இலியானாவைக் கண்டுக்கொள்ளாத நிலையில், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ரவிதேஜா, நாகர்ஜூனா, அல்லு அர்விந்த், பாலகிருஷ்ணா, பிரபாஸ் என தெலுங்கில் அத்தனை பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை  மீண்டும் பெற்றவர் இலியானா. இந்தியிலும் நடிகை இலியானா அதிக படங்களில் நடித்துள்ளார்.

Ileana

சமீப காலமாக, பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இலியானா, திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இலியானா தனது நோய்க்கான காரணங்களை கூறாத நிலையில், கையில் ஊசி மூலம் குளூக்கோஸ் ஏறுகிறது. மேலும் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்ததால் தற்போது எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Ileana

அவர் அதற்கான காரணத்தை கூறவில்லை என்றாலும் ஃபுட் பாய்சன் காரணமாக இலியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் இலியானா தன் உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் இலியானா தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web