விஜய்க்கு 'விசில்' சின்னம்: "இது நான் கொடுத்த ஐடியாதான்" ... நடிகை கஸ்தூரி!
தமிழக அரசியல் களத்தில் 'ஜனநாயகன்' பட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் விஜய்க்கு, தற்பொழுது பொதுச் சின்னம் கிடைத்துள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்திடம் 'விசில்' சின்னத்தைத் தமிழக வெற்றிக் கழகம் கோரியிருந்தது. அதனை ஏற்று, அக்கட்சிக்குப் பொதுச் சின்னமான 'விசில்' சின்னத்தை ஒதுக்கித் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்குப் பொதுச் சின்னம் கிடைப்பது பரப்புரையின் போது மக்களைச் சென்றடைய மிக முக்கியமான காரணியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் திரைத்துறை வாழ்க்கையோடு தொடர்புடைய 'விசில்' சின்னம் கிடைத்திருப்பது கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.
இயக்குநர் மோகன் ஜியின் 'திரௌபதி 2' திரைப்படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக பிரமுகரும் நடிகையுமான கஸ்தூரி பேசுகையில், "விஜய் அவர்கள் விசில் சின்னத்தைத் தான் கேட்பார் என்று ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே நான் பேசினேன். சொல்லப்போனால், அது நான் கொடுத்த ஐடியாதான். தை பிறந்ததும் அவருக்குச் சின்னம் பிறந்திருக்கிறது. சின்னம் கிடைத்துவிட்ட நிலையில், அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு (கூட்டணி அல்லது இலக்கு) வழி பிறந்திடும்" என்று அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
