புஸ்ஸி இல்லாமல் செங்கோட்டையனுடன் ஆலோசனை நடத்திய விஜய்.... கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

 
விஜய் செங்கோட்டையன்
 

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலை 2026 மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இதன் பொருட்டு அரசியல் கட்சிகள் முழு வேச்சில் தேர்தல் பணியை தொடங்கி வைத்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு கட்சிகளுக்குள் கடும் போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் செங்கோட்டையன் செங்கோல்

இதையடுத்து சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய் இல்லத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பனையூரில் கட்சியின் தினசரி பணிகளை கவனித்தார்.

செங்கோட்டையன்

மூன்று மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்காக தனி குழு அமைப்பது, அதன் உறுப்பினர்கள் யார் என்பதற்கான விவாதங்கள் நடைபெற்றன. அதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை அமைப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மக்களின் தேவைகள், மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்குமென தலைமை நிர்வாகிகள் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!