ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்… கரூருக்கு போக மாட்டீங்களா? எதிர்ப்பு போஸ்டர்கள் பரபரப்பு!

 
விஜய்
 

தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பிறகு, தமிழகத்தில் முதல்முறையாக விஜயமங்கலம் அருகே திறந்தவெளி பிரசாரக் கூட்டத்தில் அவர் பேச உள்ளார். இதற்காக காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர்களில், கரூர் சம்பவத்துக்குப் பிறகு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா?” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, ஈரோடு பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக விஜய் சென்னையிலிருந்து   விமானம் மூலம் கோவைக்கு வரவுள்ளார். கோவை விமான நிலையத்தில் தொண்டர்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழல் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!