அடுத்தடுத்த பாய்ச்சலில் தவெக விஜய்... வேலூரில் 2 வது பூத் கமிட்டி மாநாடு, 'ரோடு-ஷோ'... !

 
விஜய்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள்  இப்போதிருந்தே கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் என திட்டமிடத் தொடங்கியுள்ளன.  அந்த வகையில் தவெக  தலைவர் விஜய் தலைமையில், 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதில் இதுவரை சுமார் 69000 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கோயம்புத்தூரில் முதல்கட்ட பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர் விஜய், உரையாற்றி, எதிர்காலப் பணிகள் குறித்து வழிகாட்டினார்.திறந்த வேனில் பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி விஜய் உரையாற்றினார். 

விஜய்
இந்த மாநாட்டில் பேசிய விஜய் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கும் மாநாடு இல்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான். மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதற்காகதான் இந்த பயிற்சி பட்டறை என அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் பேசி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார். 
இதைத் தொடர்ந்து த.வெ.க. பூத் கமிட்டி 2-ம் கட்ட மாநாட்டை உடனே நடத்துவது பற்றி கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துடன் ஆலோசனை நடத்தி வந்தார். மாநாட்டுக்காக மதுரை, திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது  மாநாடு நடக்கும் இடமாக வேலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விஜய் தவெக மாநாடு 
மாநாடு நடைபெறும் இடத்தை புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். இந்த மாநாட்டில், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி உட்பட   20 மாவட்டங்களைச் சேர்ந்த பூத் உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து 2  நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதுடன், ரோடு-ஷோ நடத்தும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது