"விஜய் ஒரு மாஸ் ஸ்டார்.. குறைத்து மதிப்பிடவில்லை!" - அண்ணாமலை ஓபன் டாக்!
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்த தனது பார்வையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜய் பற்றி அண்ணாமலை கூறுகையில், "விஜய் ஒரு சினிமா ஸ்டார் மட்டுமல்ல, மிகப்பெரிய 'மாஸ்' கொண்ட தலைவர். அவரை நாங்கள் ஒருபோதும் சாதாரணமாக எடை போடவில்லை. அவரது தொண்டர்கள் களத்தில் மிகவும் பரபரப்பாக வேலை செய்து வருவதைக் காண்கிறேன்.திமுக வேண்டாம் என்று விஜய் கூறுகிறார், அதேபோல் சீமானும் திராவிடக் கட்சிகள் வேண்டாம் என்கிறார். ஆனால், திமுக வேண்டாம் என்றால் 'யார் வேண்டும்' என்பதை அவர்கள் இருவரும் தெளிவாக மக்களிடம் சொல்ல வேண்டும்"

கூட்டணிகள் குறித்துப் பேசிய அண்ணாமலை, சுவாரஸ்யமான உதாரணம் ஒன்றை முன்வைத்தார். அதிமுக - பாஜக தலைமையிலான தேமுதிக (NDA) கூட்டணி ஏற்கனவே பலமாக உள்ளது. கொள்கை முரண்பாடு உள்ளவர்கள் வலுக்கட்டாயமாக ஒன்றிணைவது பிரச்சனையைத் தரும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜ் பிரியாணி என எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தால் அதில் 'கெமிஸ்ட்ரி' இருக்காது; அது சுவையாகவும் இருக்காது."
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் சித்தாந்த வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் நாங்கள் இணைந்துள்ளோம்."
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
