“தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய் தான்” - 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும் - செங்கோட்டையன் பேட்டி!
பெரம்பூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
"234 தொகுதிகளிலும் நமது தலைவர் விஜய்தான் வேட்பாளர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டை ஆளப்போகும் ஒரே சக்தி அவர்தான்" என அவர் முழங்கினார். தற்போதுள்ள அரசியல் சூழலில் அனைத்துத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகமே வெற்றி பெறும் என்றும், மற்ற அரசியல் கட்சியினர் அனைவரும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.

"நான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரைப் பார்த்தேன், புரட்சித் தலைவி அம்மாவைப் பார்த்தேன். தற்போது புரட்சித் தளபதியைப் பார்க்கும் காலத்தை உன்னிப்பாகக் கவனிக்கிறேன்" என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். ஜனநாயகத்தை யார் முடக்க நினைத்தாலும், அதைக் காக்கும் ஒரே குரலாக விஜய் இருப்பார் என்றும், நாளைக்கான தீர்ப்பை அவரே எழுதுவார் என்றும் செங்கோட்டையன் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் பெரம்பூர் தொகுதி அளவில் தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நிர்வாகிகளின் இத்தகைய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
