விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும்... தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்!

 
தமிழிசை

இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை நேற்று உயர்த்தப்பட்டு இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் திரும்ப பெற வலியுறுத்தினார்.  இது குறித்து வெளியிட்ட அந்த அறிக்கையில், மக்களை வதைக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு   விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும்” என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, அவருடைய கண்டனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருக்கிறார். இது குறித்து  “கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்பப்பெறும்படி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத இருக்கிறோம்.  சர்வதேச சந்தையில் 60 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்ட காரணத்தால் தான் இந்த விலையேற்றம் நடந்திருக்கிறது.

விஜய்
கேஸ் விலை உயர்ந்ததற்கு பெரிய அறிக்கையை ஒன்றும் தெரியாமல் விஜய் வெளியீட்டு இருக்கிறார். நான் பொதுவாகவே கேட்கிறேன் விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நான் சினிமாவில் நடிக்கிறேன் என்று விஜய் சொல்கிறார். பாமர மக்கள் சினிமா பார்க்க வருகிறார்கள். அவர்களுக்காக குறைந்த விலையில் அல்லது இலவசமாக கொடுங்கள் யார் தடுத்தார்கள்?

தனி விமானம் மூலம் `ரெம்டெசிவிர்’ மருந்தை கொண்டு வந்த தமிழிசை !
உங்களுக்கு லாபமெனில்  பேசமாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய் போன்றோர் தயவு செய்து பேச வேண்டாம். Demonetization மூலம் கருப்பு பணத்தை பிரதமர் ஒழித்தாரே, அப்படி விஜய் திரைத்துறையில் Black டிக்கெட்டை ஒழித்தாரா?  விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும், ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது. விஜய்க்கு இந்த விஷயங்கள் தெரியுமா? இல்லையா என்பதை அவரிடம் கேளுங்கள்” எனவும் காட்டத்துடன் தமிழிசை பேசியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web