மக்களுக்கு சேவை செய்வதற்கான பயணத்தில் உங்கள் ஆதரவு மேலும் ஊக்குவிக்கிறது நன்றி... விஜய் நெகிழ்ச்சி!

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் நேற்று ஜூன் 22ம் தேதி தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்து மழையை பொழிந்த திரைப்படத் துறை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி.
மக்களுக்கு சேவை செய்வதற்கான எனது பயணத்தை நீங்கள் அளிக்கும் ஆதரவு மேலும் ஊக்குவிக்கிறது . பிரகாசமான எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!