மேளதாளங்களுடன் தொண்டர்கள் படைசூழ கருத்தரங்கிற்கு புறப்பட்டார் விஜய்!

கோவை விமான நிலையத்தில் விஜயை வரவேற்க அக்கட்சி தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விஜய் விமான நிலையத்திலிருந்து தனது வாகனத்தின் ஏறி தொண்டர்களை பார்த்து கையை அசைத்தபடியே சென்றார். அப்போது விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை வழிநெடுக காத்திருந்த தொண்டர்கள் விஜய்யை மேளதாளங்களுடன் வரவேற்றனர். 3 மணியளவில் சரவணம்பட்டி பகுதியில் நடைபெறும் பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தல் களப்பணிகள் குறித்து தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தேர்தல் களத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கோவையில் இன்று 2வது நாளாக நடைபெறும் தமிழக வெற்றிக்கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் புறப்பட்டார். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தில் சென்ற விஜய், தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!