தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்... தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்!
தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று முக்கிய தருணம் உருவானது. நீண்ட அரசியல் அமைதிக்கு பிறகு நாஞ்சில் சம்பத், விஜய் தலைமையிலான கட்சியில் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கினார். அவரை வரவேற்று கொண்டு கட்சித் தலைமையகத்தில் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அறிவாலயத்தில் என்னை திட்டமிட்டு வசைபாடினர்; அதனால் மனதளவில் மிகுந்த சுமையை அனுபவிக்க நேரிட்டது. திமுகவின் அறிவுத்திருவிழாவில் என்னை நிராகரித்தது பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தியது,” என கூறினார். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக எந்தக் கட்சிக்கும் இணைக்காமல் இருந்ததாகவும் விளக்கினார்.

“பெரியார்–அண்ணா இலட்சியங்களைப் பேசி வந்த நான், இன்று புதிய பிறவியை கண்டதுபோல் மனம் நிறைந்துள்ளது. விஜய் எனக்கு முழு அனுமதி அளித்துள்ளார். என்னை கட்டுப்படுத்தி வைத்தவர்கள் இருந்தாலும், இப்போது என்னை இயக்கும் வாய்ப்பை விஜய் தந்துள்ளார். இளைஞர்களை வைத்து அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜயிடம் உள்ளது,” என உற்சாகமாக தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
