ஒவ்வொரு தொகுதிக்கும் 5 தேர்தல் அலுவலகங்கள் - விஜய் உத்தரவு!

 
விஜய்

கட்சியின் அடிப்படை மட்டத்திலான செயல்பாடுகளை தீவிரப்படுத்தவும், வாக்காளர்களை நேரடியாகச் சென்றடையவும் இந்த புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தலா 5 தேர்தல் அலுவலகங்கள் வீதம், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 1,170 அலுவலகங்களை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரிய அளவில் ஒரு மைய அலுவலகம் இருப்பதை விட, தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சிறிய அலுவலகங்கள் இருந்தால் மக்கள் எளிதில் அணுக முடியும் என விஜய் கருதுகிறார்.

விஜய்

இந்த அலுவலகங்கள் அந்தந்த பகுதி நிர்வாகிகளின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என்பதால், அடிமட்டத் தொண்டர்களிடையே இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 5 அலுவலகங்களும் பின்வரும் பணிகளை ஒருங்கிணைக்கும்.

புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் மற்றும் பிழைகளைச் சரிசெய்தல், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ள முகவர்களுடன் (Booth Agents) ஆலோசனை நடத்துதல். தவெக-வின் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளைத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தல். மக்களின் உள்ளூர் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதனைத் தலைமையிடத்திற்குத் தெரிவித்தல்.தவெக விஜய்

சேலத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டத்திற்கு முன்னதாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த

லுவலகங்கள் திறக்கப்பட்ட பிறகு, விஜய் நேரடியாக சில அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகள் ஏற்கனவே வலுவான கிளைக் கழக அமைப்புகளைக் கொண்டுள்ளன. அதற்குப் போட்டியாக, குறுகிய காலத்தில் கட்சிக்கு ஒரு நிரந்தர முகவரியை (Physical Presence) மாநிலம் முழுவதும் உருவாக்கவே விஜய் இந்த '5 அலுவலகம்' திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!