பிக்பாஸ் மேடையில் ஹவுஸ்மேட்ஸை கிழித்து எடுத்த விஜய் சேதுபதி!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் - 9' சீசன் நிகழ்ச்சி, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், போட்டியாளர்களின் செயல்பாடுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சீசனில் போட்டியாளர்களான கம்ரூதின் மற்றும் விஜே பார்வதி இருவரும், தாங்கள் அணிந்திருக்கும் மைக்கை வேண்டுமென்றே 'ஆஃப்' செய்துவிட்டு ரகசியமாக உரையாடுவது வழக்கம். இந்தச் செயல் பார்வையாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது.
போட்டியாளர்கள் விதிகளை மீறி ரகசியமாகப் பேசுவது குறித்து, இன்று (டிசம்பர் 13) வெளியான புரமோவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். மைக்கை அணைத்துவிட்டுப் பேசிய கம்ரூதின் மற்றும் விஜே பார்வதி இருவரையும் அவர் கடுமையாக எச்சரித்தார். நிகழ்ச்சியின் முக்கிய விதிமுறைகளை மீறுவது தவறு என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
விஜய் சேதுபதியின் கோபமான பேச்சைக் கண்டு போட்டியாளர்கள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மைக்கை ஆஃப் செய்துவிட்டு பேசுவதைக் கண்டித்த அவர், "அப்படியென்றால், மைக்கை கழற்றி வைத்துவிட்டு பேசுங்கள்" என்று கடுமையாக உத்தரவிட்டார். தொகுப்பாளரின் இந்த திடீர் நடவடிக்கையானது, இந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டில் மேலும் சில கடுமையான முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
