விஜய் மகன் ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பு!

 
ஜேசன் சஞ்சய்


 
சேலம் மாவட்டத்தில்  பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நடைபெற்றது. நேற்று பிப்ரவரி 25ம் தேதி மாலை 6 மணிக்கு  சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவன முக்கிய நபருமான ஜி.கே.எம்.தமிழ்குமரனும் வருகை தந்தனர்.


அதேபோல நடிகர் விஜய் சேதுபதி உட்பட பல திரை பிரபலங்களும் வந்துள்ளனர். குறிப்பாக, நடிகரும், தவெக கட்சித்தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் விஜய்யும் இத்திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். ஜேசன் சஞ்சய், முதல் முறையாக ஒரு அரசியல்வாதியின் திருமணத்தில் கலந்து கொண்டார். விஜய் எப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொள்வாரோ அதே லுக்குடன், அதே நடை பாவனையுடன் நடந்து கொண்ட ஜேசன் சஞ்சய்,விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தனது பேரனின் திருமண விழாவுக்கு வந்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஒருபக்கம் ஜி.கே.மணி சால்வை அணிவிக்க, தமிழ்க்குமரன் மறுபக்கம் மாலை அணிவித்து கெளரவம் செய்தனர்.


விஜய்யின் மகனின் அரிதான இந்த பொதுவெளி தோற்றம் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், சமூக வலைதளத்திலும்  குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றது. இதனை வைத்து நெட்டிசன்கள் ஜேசன் சஞ்சய் அப்படியே அவங்க அப்பாவை போலவே இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு  வருகின்றனர்.
இதனிடையே, ஜி.கே.மணி இல்ல திருமண நிகழ்வில் ஜேசன் விஜய் கலந்து கொள்ள வந்ததை குறிப்பிட்டு, சிலர் விஜய்க்கு பதிலாக வந்துள்ளாரா என்றும் சிலாகித்தனர். ஆனால், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். லைகா நிறுவன முக்கிய நிர்வாகியாக உள்ள தமிழ்குமரன் அழைப்பின் பெயரில் ஜேசன் விஜய் வந்திருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?