பழநி கோயில் ஸ்பீக்கரில் விஜய் பாடல்… தவெக தொண்டர் மீது போலீஸ் புகார்!

 
pazhani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருவிழா சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் பக்தர்களுக்கான அறிவிப்புகள் ஒலிக்க பயன்படுத்தப்படும் ஸ்பீக்கரில், நடிகர் விஜய் நடித்த திரைப்படப் பாடல் ஒலித்தது பரபரப்பை கிளப்பியது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தைப்பூச விழா ஜனவரி 26 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்ற நிலையில், சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். நெரிசலை கட்டுப்படுத்த பல இடங்களில் ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டு, முக்கிய அறிவிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த சூழலில், தவெகவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனை இணைத்து Vijay நடித்த திரைப்படப் பாடல்களை ஒலிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததும், அது வைரலாக பரவியது. கோயிலின் புனிதத்தன்மையை பாதிக்கும் வகையில் நடந்த இந்த செயலில் ஈடுபட்ட இளைஞரை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!