தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்... விஜய் ஆவேசம்!

 
தவெக
 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். “தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 வருஷமா என்னை தாங்கி நிற்கிறீங்க. இந்த விஜய் தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல; புதுச்சேரிக்காகவும் குரல் கொடுப்பான். இது என் கடமை” என்ற அவரது வார்த்தைகள் தொண்டர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தின.

தவெக

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கடுமையாக சாடிய விஜய், “16 முறை சட்டமன்ற தீர்மானம் அனுப்பியும் மாநில அந்தஸ்து இல்லை. அமைச்சர் பதவி ஏற்று 200 நாளாகியும் இலாகா ஒதுக்கப்படவில்லை” என்றார். மேலும், “டூரிஸ்ட் நகரமான புதுச்சேரியில் பார்க்கிங், கழிப்பறை, ரேஷன் கடைகள் இல்லை. இந்த அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தவெக விஜய்

திமுக அரசையும் மறைமுகமாக விமர்சித்த விஜய், “பாதுகாப்பில் பாரபட்சம் பார்க்காமல் நடந்த புதுச்சேரி அரசுக்கு நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாடு அரசு கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். “புதுவையில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்” என உறுதியளித்த அவர், எம்ஜிஆர் கால வரலாற்றையும் நினைவூட்டினார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதல் கூட்டம் என்பதால் கடும் பாதுகாப்பு போடப்பட்ட போதும், கூட்டம் உற்சாகமாகவும் அமைதியாகவும் நிறைவடைந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!