ஓசி ஓசி எனக் கூறி மக்களை கேவலப்படுத்துகிறீர்களா? விஜய் ஆவேசம்… !
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் உரையாற்றினார். மக்களுக்கான சலுகைகளுக்கு தான் எதிரானவன் இல்லை என கூறிய அவர், சலுகைகளை “ஓசி” என்று சொல்லி மக்களை கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். அப்படி பேசினால் அதைத் தட்டிக்கேட்கத்தான் தான் அரசியலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளையடிப்பவர்களே தங்களின் அரசியல் எதிரிகள் என விஜய் சாடினார். பெரியார் பொதுவாழ்க்கையில் இருந்தபோதும் தனக்கென ஒரு பைசா கூட சேர்க்காதவர் என பாராட்டினார். அவரது பெயரை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதை கடுமையாக கண்டித்தார்.

திமுக ஒரு தீய சக்தி என்றும், தவெக ஒரு தூய சக்தி என்றும் விஜய் கூறினார். களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்றும், தரக்குறைவான அரசியல் நமக்கு தேவையில்லை என்றும் பேசினார். இந்த உரை தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. 2026 தேர்தலை நோக்கி தவெகவின் அரசியல் வேகம் அதிகரித்துள்ளதாக இந்தக் கூட்டம் காட்டியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
.
