உங்கள நம்பித் தான் வந்திருக்கேன்... விஜய் பேச்சுக்கு தொண்டர்கள் ஆரவாரம்!
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இன்று ஈரோடு மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். “மஞ்சள் என்றாலே தனி வைப்தான். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி ஈரோடு. நல்ல காரியங்கள் எல்லாம் மஞ்சளில்தான் தொடங்கும். தவெக கொடியிலும் மஞ்சள் நிறம் இருப்பது யாத்ருச்சியம் அல்ல” என்று அவர் உற்சாகமாக பேசினார்.

காலிங்கராயன் அணை குறித்து உருக்கமாக பேசிய விஜய், “இந்த அணைக்கு உயிரும் உணர்வும் உண்டு. அதை கட்டிய காலிங்கராயனுக்கு அவரது அம்மா தைரியம் கொடுத்தார். அதே தைரியத்தை இன்று என் அம்மாக்களும், அக்காக்களும், தங்கைகளும் எனக்குத் தந்திருக்கிறீர்கள்” என்றார். “10 வயதில் தொடங்கிய என் மக்கள் உறவை யாராலும் பிரிக்க முடியாது. மக்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்” என்றும் கூறினார்.

“ஆட்சியாளர்களுக்கு கொள்ளைப் பணம் துணை. எனக்கு மக்களின் ஆதரவே பலம்” என்று விமர்சித்த விஜய், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே எதிர்க்கிறோம் என தெளிவுபடுத்தினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் தமிழ்நாட்டின் பெருமை என்றும் பாராட்டினார். லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்த இந்தப் பிரச்சாரம், தவெகவின் வளர்ந்து வரும் செல்வாக்கை வெளிப்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
