ஈரோட்டில் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்புக்கு அனுமதி... டிச.18ல் மாபெரும் கூட்டம்!

 
தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வு வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ளது. ஆரம்பத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், இறுதியாக இந்தக் கூட்டத்தை நடத்த ஈரோடு மாவட்ட எஸ்.பி. அனுமதி வழங்கியுள்ளார்.

தவெக தலைவர் விஜய், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே உள்ள சரளைப் பகுதியில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தவெக

ஆனால், இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக மாவட்டக் காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்தது. இந்தக் கூடுதல் நிபந்தனைகளைச் செயல்படுத்துவதற்குத் கால அவகாசம் தேவைப்பட்டதால், கட்சியின் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளரான செங்கோட்டையன், அந்தக் கூட்டத்தை டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். மாற்றப்பட்ட தேதியான டிசம்பர் 18-ஆம் தேதி கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கக் கோரி, தவெக-வினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.

தவெக

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஈரோடு மாவட்டக் காவல்துறை, தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்குத் தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!