வைரலாகும் இன்ஸ்டா.... விஜய் த்ரிஷா திடீர் சந்திப்பு!

 
த்ரிஷா

 தவெக தலைவரும் முண்ணனி நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜனநாயகன். படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தப்படம் ஜனவரியில் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று  ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் என்பதால் படக்குழு கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. அதில்  பல திரைப்பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்து சொன்னார்கள். அந்த வரிசையில் நடிகை த்ரிஷா நேற்று இரவு விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதை பார்த்ததில் இருந்து ஜன நாயகன் படத்தில் த்ரிஷா நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.  
நடிகர் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தவெக தொடங்கப்பட்ட போது  சினிமாவில் இருந்து முழுவதுமாக வெளியேற போவதாகவும் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. விஜய் மேற்கொண்டு நடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் 2026 ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்த  முடிவை உறுதியாக எடுப்பேன் எனக் கூறினார் என நடிகை மமிதா பைஜூ கூறினார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு த்ரிஷா பகிர்ந்த வாழ்த்து புகைப்படம், அதன் பின்னர் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் என அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது ஜன நாயகன் படத்திலும் த்ரிஷா நடித்துள்ளாரா அல்லது கோட் படத்தைப் போல ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. 

கோட்


 விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல பகிர்ந்த புகைப்படத்திலும் அதை அடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு தனது செல்லப்பிராணியை முதன் முதலாக அழைத்து வந்ததாகவும் பதிவிட்டுள்ளார். இரண்டிலும்  த்ரிஷா ஒரே உடையைத்தான் அணிந்துள்ளார். இதனைப் பார்க்கும்போது, விஜய்யும் ஜன நாயகன் படத்தின் லுக்கில் தான் த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்திலும் உள்ளார்.  ஏற்கனவே விஜய்யின் கோட் படத்தில் த்ரிஷா ஒரு  பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதேபோல் ஜன நாயகன் படத்திலும் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கலாம் என்கின்றனர் விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்கள்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது