தென்காசி பேருந்து விபத்தில் 6 பேர் பலி... தீவிர வேதனை .. தவெக விஜய்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்து, ஒரே நாளில் ஆறு உயிர்களை பறித்தது. பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இந்த விபத்தில், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) November 24, 2025
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும்…
இந்த நிலையில், தென்காசியில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். “பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்,” என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் எனவும், உயர்தர சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
