ஏசி கேரவனில் அமர்ந்து வேலை செய்யும் விஜய் ஒரு போலி அரசியல்வாதி... திவ்யா சத்யராஜ் அட்டாக்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். இவருடைய மகன் சிபிராஜ். மகள் திவ்யா. சத்யராஜ் திராவிடக் கொள்கைகளை பின்பற்றுபவர். அவரது மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 2024ல் திவ்யா சத்யராஜ் தான் அரசியலில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார். அவர் திமுகவில் இணைந்த கையோடு அவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது.
திமுகவில் இணைந்த பின்னர் முதன்முறையாக அரசியல் மேடையேறி பேசிய திவ்யா சத்யராஜ், அதில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு ஷொட்டு வைத்துள்ளார். குறிப்பாக உதயநிதியையும் விஜய்யையும் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யை போலி அரசியல்வாதி எனக் கூறியுள்ளார். அதன்படி “உதயநிதி ஸ்டாலின் சார், ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு, சொகுசு விமானத்தில் ‘பிரெண்டு’ கூட ‘பிரெண்டு’ திருமணத்துக்கு போகும் ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. அவர் ஒரு கடின உழைப்பாளி. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்வார். பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் தான் உதயநிதி. அவரை எதிர்த்து யார் நின்றாலும் டெபாஸிட் போயிடும். அவர் ஒரு வீழ்த்த முடியாத ஹீரோ” என பேசியுள்ளார் திவ்யா சத்யராஜ்.
தொடர்ந்து திவ்யா சத்யராஜ், “நான் கல்லூரியில் படிக்கும்போது ஆசிரியர் எல்லாரிடமும் நீங்க யாருடைய ரசிகை என கேட்டார். சிலர் நான் மைக்கேல் ஜாக்சனின் ரசிகை, அமீர்கான் ரசிகை என கூறினார்கள். ஆனால் அப்போது நான் கலைஞர் ஐயாவின் ரசிகை என பெருமையாக சொன்னேன். இன்று ஒரு பெண்ணாக இங்கு நின்று பேசுகிறேன் என்றால் அந்த தைரியம் எனக்குள் வந்ததற்கு காரணம் கலைஞர் ஐயா தான். அப்பா காசில் வாழாமல் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற தைரியம் வந்ததற்கும் கலைஞர் தான் காரணம்” என திவ்யா பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!