இன்று விஜய் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

 
விஜய்
 


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விஜய்யின் கடைசி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இதனையடுத்து அவர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். 

விஜய் தவெக மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்  ஏப்ரல் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில்  தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் கலந்து கொண்டனர். இதனிடையே கோவையில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு நடத்த அக்கட்சி தலைமை திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தவெக
இந்நிலையில், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில்  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web