“உற்சாகத்தோடும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள்” மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

தமிழகம் முழுவதும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வு ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 27, 2025
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை தொடங்கும் 10ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உற்சாகத்தோடும் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வெற்றி நிச்சயம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!