“ஒரே மேடையில் விழாவில் பங்கேற்றால் அணி மாறி விடுவோமா?” - தொல்.திருமாவளவன் ஆவேசம்

 
திருமா
 

 


நடிகர் விஜய்யுடன் ஒரே மேடையில் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பதாக செய்திகள் வெளியான நிலையில், தான் திமுக கூட்டணியில் தொடர்வதாக மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “மாற்றுக் கருத்துக் கொண்ட தலைவரோடு  விழாவில் பங்கேற்றால் அணி மாறிவிடுவோமா?” என ஆவேசமாக  கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மைக் காலமாக  அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும்  நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர்.

அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்’ இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்.

அவர்கள் யாவரென கேள்வி எழுவது இயல்பேயாகும். குறிப்பாக, திமுகவைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள் தாம்.

இவர்கள் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலிருந்தே இத்தகைய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் அவ்வப்போது நம்மை ஆதரிப்பது போலவும் காட்டிக்கொண்டே நமது கூட்டணிக்கெதிராக நம்மைச் சீண்டியும் தூண்டியும் வருகின்றனர். அவற்றுக்குப் பலியாகாமல் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இயங்கிவருகிறோம். கடந்த காலங்களில் அத்தகைய அரசியல் சதிகளையும் முறியடித்திருக்கிறோம்.

’மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ என்பது திமுக - விசிக உட்பட 10-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஒரு கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டணி 2019, 2021, 2024 பொதுத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதைக் கொள்கைப் பகைவர்களாலும் அரசியல் போட்டியாளர்களாலும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள, சகித்துக்கொள்ள இயலும்?

2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றி பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்? எப்படியாவது  கூட்டணியைச் சிதறடித்து நமது வெற்றியைத் தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும். அவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு அடையாளங்களில் இயங்கினாலும் அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சிதறடிப்பது மட்டும் தான்.

அவர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் கையாளும் உத்திகளுள் ஒன்றுதான், திமுகவுக்கும் திமுக  கூட்டணியிலுள்ள பிற கட்சிகளுக்கும் இடையில் கொம்புசீவும் முயற்சியாகும். அத்தகைய முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டுவருகின்றனர்.

விஜய் திருமா

குறிப்பாக, திமுக - விசிக இடையே உரசலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் குரலெழுப்புகிறபோதெல்லாம் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளோடு இயல்பாக எழும் சின்னஞ்சிறு முரண்களையும்கூட கூர்தீட்டுவதில் அதிவேகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அத்தகைய சதிச் செயல்களுக்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டையொட்டி, பரந்த பார்வையோடு பொதுநல நோக்கோடு,   “அதிமுகவும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமே" என நாம் கூறியதை,  ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நமது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எவ்வளவு வேகமாக களத்தில் இறங்கினர் என்பதை நாடறியும். அதனை நாம் மிக லாகவகமாக முறியடித்தோம்.

அடுத்து, "ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு" என்னும் நமது கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, கொள்கை நிலைபாட்டை ஒரு கருவியாக கையிலெடுத்தனர். முதன்முதலாக, புத்தம் புதிதாக இப்போது தான் நாம் இதனைப் பேசுகிறோம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதுவும் ' எதிர்வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக திட்டமிட்டே ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குகிறோம்' என வேண்டுமென்றே உண்மை நிலையைத் திரித்து, நம்மை திமுகவுக்கு எதிராக நிறுத்தி உரசலை உருவாக்கிட பெரும்பாடுபட்டனர். அதனையும் மெல்ல நீர்த்துப்போகச் செய்தோம்.

தற்போது,  தவெக தலைவரும் நடிகருமான விஜய்யோடு நாம் இணைந்து தேர்த…

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!