நாளை தனி விமானம் மூலம் டெல்லி புறப்பாடு … விஜய் கரூர் விவகாரம் சி.பி.ஐ. விசாரணையில் நேரில் ஆஜர் !
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக த.வெ.க. நிர்வாகிகள், கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.

கடந்த 6ஆம் தேதி அனுப்பப்பட்ட சம்மனில், 12ஆம் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட விஜய், நாளை காலை தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

இந்த நிலையில், விஜய்க்கு டெல்லியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என த.வெ.க. சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. விஜய் தங்கும் இடம் மற்றும் அவர் செல்லும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என டெல்லி காவல்துறை உறுதி அளித்துள்ளது. ரசிகர்கள் கூடும் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
