எந்த அழுத்தத்திற்கும் அடங்க மாட்டேன்... விஜய் பரபரப்பு பேச்சு!

 
vijay

தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் உருக்கமாக பேசினார். நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருப்பதாக கூறினார். நமக்கு அழுத்தம் இருக்கிறதா என்றால், அது மக்களுக்கு தான் என்றும், மாற்றி மாற்றி ஏமாந்த மக்கள் இன்று வேதனையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அடிமையாக இருக்க அரசியலுக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்தார் என சிலர் குறைத்து மதிப்பிடுவதாகவும், ஆனால் 30 ஆண்டுகளாக இப்படியே தங்களை குறைத்து பேசிவந்ததாகவும் கூறினார். மக்கள்தான் எங்களை சரியாக மதிப்பிடுகிறார்கள் என்றார். ஊழலை ஒரு துளி கூட அனுமதிக்க மாட்டேன் என்றும், ஒரு பைசாவையும் தொட மாட்டேன் என்றும் உறுதியாக பேசினார்.

அதிமுக பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டதாகவும், திமுக ஒரு தீய சக்தி என்றும் விஜய் விமர்சித்தார். எந்த சூழ்ச்சிக்கும், எந்த அழுத்தத்திற்கும் அடங்க மாட்டேன் என்றார். வரவுள்ள தேர்தல் ஜனநாயகப் போர் என்றும், அந்தப் போரில் செயல்வீரர்களே தளபதிகள் என்றும் கூறி, அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!