ஜோதிடருடனே சுற்றித் திரியும் விஜய்... கட்சியிலும் முக்கியப் பொறுப்பு!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஜோதிடர் ஒருவர் நெருக்கமாக இருந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அவர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். சமீபத்தில் தவெக மாநில செய்தி தொடர்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சி தொடங்கிய பிறகு விஜய்க்கு அவர் மிக நெருக்கமானவராக மாறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த ராதன் பண்டிட், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்தவர். 1989ல் ஜெயலலிதா முதல்வர் ஆவார் என்றும், 1996ல் தேர்தல் தோல்வி மற்றும் சிறை செல்ல நேரிடும் என்றும் கணித்தார். அவை நடந்ததால் ஜெயலலிதா பல முடிவுகளை அவரின் ஆலோசனையுடன் எடுத்ததாக கூறப்படுகிறது. பெயரில் கூடுதலாக ‘A’ சேர்த்ததும், சசிகலாவின் பெயர் மாற்றத்திற்கும் இவரே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
விஜய் அரசியலில் இறங்கிய பிறகு ராதன் பண்டிட் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். 2026ல் விஜய் முதலமைச்சர் ஆவார் என அவர் பேட்டி அளித்திருந்ததும் பேசப்பட்டது. பிரச்சார தேதிகளையும் இவரே குறிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஜோதிடர் மாநில செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுள்ள விஜய் ஜோதிட ஆலோசனைகளை கேட்பதாக எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
