விஜய் இன்னும் 2 முறை சிபிஐ விசாரணைக்கு போனால் கட்சியை கலைத்துவிடுவார்!" - ஆர்.எஸ். பாரதி!

 
ஆர் எஸ் பாரதி


கரூரில் இன்று நடைபெற்ற திமுக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,  "விஜய் இன்னும் இரண்டு முறை சிபிஐ விசாரணைக்குச் சென்றால், பயந்துபோய்க் கட்சியையே கலைத்துவிடுவார்" என்று பேசினார். 

கரூர் விஜய்

"தமிழகத்தில் இன்று இந்திப் படங்கள் ஓடாததற்குக் காரணமே திராவிட இயக்கம்தான்" என்று குறிப்பிட்ட அவர், திராவிட அரசியலின் வேர்களை யாராலும் அசைக்க முடியாது. சமீபத்தில் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி ஆற்றிய பேச்சுக்குப் பதிலடி கொடுத்த அவர், "மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் மோடி 8 முறை தமிழகம் வந்தார். ஆனால் என்ன நடந்தது? 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு 10 முறை வாருங்கள். நீங்கள் எவ்வளவு முறை வந்தாலும், தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது" என்று சவால் விடுத்தார்.

"தமிழக அரசு தினமும் ஒரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. எங்களது கணக்குப்படி, பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளுக்கும் (Booths) பிஎல்ஓக்களை (BLO) அமைத்துள்ள ஒரே கட்சி திமுக மட்டும் தான். நாங்கள் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராக இருக்கிறோம்" என்று கர்ஜித்தார்.தேர்தல் ஆணையமே திமுகவினரின் களப்பணியைப் பாராட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2026-லும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியே தொடரும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!