ரசிகர் பலத்தை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவேன்... தவெக தலைவர் விஜய் உறுதி!

 
விஜய்

 

தவெக தலைவர் நடிகர் விஜய், NDTV-க்கு அளித்த முதல் தேசிய ஊடக பேட்டியில் தனது அரசியல் எண்ணங்களை வெளிப்படையாக கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததாகவும், அந்த வலியிலிருந்து இன்னும் மீளவில்லை என்றும் உருக்கமாக பேசினார். இது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும், அரசியலில் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை என்றும், தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

தவெக விஜய்

அரசியலுக்கு நீண்ட கால திட்டத்துடன் வந்துள்ளதாக கூறிய விஜய், இந்த மாற்றம் எளிதானது அல்ல, மிகவும் கடினமான பயணம் என்றார். பல ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும், அரசியலுக்காக மனநிலையை தயார்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். ‘ஜனநாயகன்’ படம் தாமதமானது குறித்து தயாரிப்பாளரின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த அவர், அரசியல் காரணமாக தாக்குதல்கள் வரும் என்பதை முன்பே எதிர்பார்த்ததாக சொன்னார்.

தவெக விஜய்

இந்த அரசியல் பயணம் ஒரே ஒரு தேர்தலுக்கானது அல்ல என்றும், நீண்ட கால மாற்றத்திற்கானது என்றும் விஜய் விளக்கினார். ரசிகர்களை கட்சி தொண்டர்களாக மாற்றுவதே தனது முக்கிய இலக்கு என்றார். ரசிகர் பலத்தை முழுமையாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற உறுதியுடன் அவர் பேசினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!