வருமான வரி வழக்கு… நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்… உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

 
மது
 

வருமான வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015-16 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கில் விஜய் ரூ.35.42 கோடி வருமானம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் ‘புலி’ திரைப்படத்துக்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறை கண்டறிந்தது.

இதையடுத்து வருமானத்தை மறைத்ததாகக் கூறி 2022 ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது அபராத உத்தரவு காலதாமதமாக பிறப்பிக்கப்பட்டதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிராக, வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த மேல்முறையீடு முடிந்த பின் சட்டப்படி ஆறு மாதத்திற்குள் அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என இறுதி தீர்ப்பு வழங்கினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!