விஜய் முன்னாள் மேலாளருக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு!

 
திமுக
 

 

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது அணியை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கட்சியில் புதிதாக இணையும் நபர்களுக்கு உடனடியாக பொறுப்பு வழங்கி கூடுதல் ஆதரவை பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம் திமுகவில் இணைந்துள்ளனர்.

ஸ்டாலின் திமுக

திரைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பி.டி.செல்வகுமார், விஜயுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இவரது இணைப்பு மூலம் இளைஞர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. அவருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விஜய்

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினமும் திமுகவில் இணைந்து செய்தி தொடர்பு துணைத் தலைவர் பொறுப்பு பெற்றுள்ளார். இவரது அரசியல் அனுபவம் தேர்தல் பிரச்சாரத்தில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு புதியவர்களை இணைத்து பொறுப்பு வழங்குவது திமுகவின் முக்கிய வியூகமாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!