விஜய்யும் மக்களும் பிரிக்க முடியாத ஒன்று... வேலூரில் விஜய் நெகிழ்ச்சி!
வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் தலைவர் விஜய் உரையாற்றினார். “மற்ற தேர்தல்களில் வாக்கு செலுத்தி வீடு திரும்புவீர்கள். ஆனால் இந்த முறை நீங்கள் நேரடியாக தேர்தலில் பங்கேற்கிறீர்கள்” என்றார். “உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு விஜய்தான் வேட்பாளர். அதனால் உங்கள் குடும்ப வாக்கு விசில் சின்னத்திற்கே செல்லும்” எனக் கூறினார்.
“அதனால்தான் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். என்னை குறை சொல்வது மக்களை குறை சொல்வதற்கு சமம். எனக்கு அரசியல் தெரியாது என்பதன் அர்த்தம் மக்களுக்கு தெரியாது என்பதாகும். என்னை அவமதிப்பது மக்களை அவமதிப்பது போல” என்று கடுமையாக பேசினார்.
“விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல. ரத்தமும் சதையும் போல. உடலும் உயிரும் போல. ஒன்றை ஒன்றிலிருந்து பிரிக்க முடியாது. அது மிக உணர்ச்சி பூர்வமான பந்தம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
