அட... தாய்மாமன் , அண்ணன் சீர் திட்டங்கள்... தவெகவின் அதிரடி திட்டங்கள்!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெண்களுக்கான பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான தனித் துறை உருவாக்கப்படும் என்றும், அது முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும் 60 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

அதோடு ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆறு எரிவாயு சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும். திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச் சேலை வழங்கும் “அண்ணன் சீர்” திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என்றார். மாணவிகள் பள்ளி கல்வியை தொடர தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலு நாச்சியார் படை உருவாக்கப்படும் எனவும், மாநிலம் முழுவதும் பல குழுக்கள் அமைக்கப்படும் எனவும் பெண்களுக்கு எதிரான வழக்குகளுக்காக தனி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அத்துடன் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் அவசர அழைப்பு வசதி ஏற்படுத்தப்படும் சுய உதவி குழுக்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
