பள்ளிகளில் 'தளபதி' பாடல்களுக்குத் தடையா? - கல்வித்துறை அதிரடி உத்தரவால் விஜய் ரசிகர்கள் கொதிப்பு!

 
vijay vijay

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் ஆண்டு விழாக்களில் நடிகர் விஜய்யின் திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாகப் பள்ளி விழாக்களில் சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் பாடல்களே மாணவர்களின் முதல் தேர்வாக இருந்து வந்தன. தற்போது விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

vijay

ஆண்டு விழா நடனங்களின்போது சில மாணவர்கள் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ கட்சிக் கொடிகள் மற்றும் சின்னங்களைக் காட்சிப்படுத்துவது அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்தது. பள்ளி வளாகத்திற்குள் அரசியல் ஊடுருவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்தத் தடை உருவாக்கப்பட்டதாகக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் ரசிகர்கள் கொடிகளுடன் திரள்வது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் தொடர்ச்சியாகவே பள்ளிகளிலும் இந்தக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

vijay

இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் 'ப்ளூ சட்டை' மாறன், "குறிப்பிட்ட ஒரு நடிகரின் பாடலை மட்டும் இலக்காக வைக்காமல், அனைத்து சினிமா பாடல்களுக்கும் பள்ளி வளாகத்தில் தடை விதிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்திற்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளது. இதற்கிடையே, "விஜய்க்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டபோது சேப்பாக்கம் மைதானத்திற்கு விசில் கொண்டு செல்லத் தடை விதித்தார்கள், இப்போது பள்ளிகளில் பாடல்களுக்குத் தடை விதிக்கிறார்கள்; அடுத்து என்னென்ன தடைகள் வருமோ?" என விஜய் ரசிகர்கள் இணையத்தில் தங்களது ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!