இன்று திருச்சியில் விஜய் வேட்புமனு தாக்கல்!
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது தேர்தல் அரசியல் பயணத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 2) பிற்பகல் திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.

இதற்காக இன்று காலை சென்னையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார். மதியம் சுமார் 12:30 மணியளவில் அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை அவர் சமர்ப்பிக்க உள்ளார். விஜய்யின் வருகையை முன்னிட்டுத் திருச்சி மாநகரம் முழுவதும் தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் குவிந்துள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இந்தப் பிரச்சாரத்தின் போது அவர் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். விஜய்யின் இந்த இரட்டைத் தொகுதிப் போட்டி மற்றும் நேரடிப் பிரச்சாரம் தமிழகத் தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், அரசியல் கட்சிகளிடையே ஒரு புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
