நாளை காரைக்குடியில் விஜய் பரப்புரை... டிரான்ஸ்பார்மர் முதல் மரம் வரை போலீஸ் பலத்த பாதுகாப்பு!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தீவிரப் பரப்புரையை மாநிலம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நாளை (ஏப். 10) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விஜய் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காகக் காவல்துறையினரிடம் உரிய அனுமதி கோரப்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் பரப்புரை மேற்கொள்ள போலீஸ் தரப்பில் தற்போது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

விஜய்யின் வருகையை முன்னிட்டு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் தற்போது தவெக தொண்டர்களின் வசமாகியுள்ளது. பரப்புரை நடைபெறும் இடத்தைச் சுற்றிப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரளுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, உற்சாக மிகுதியில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மின் கம்பங்கள், உயரமான மரங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் மீது ஏறித் தங்களை விபத்துக்குள்ளாக்கிக் கொள்வதைத் தவிர்க்க, அந்தப் பகுதிகளில் இரும்புத் தடுப்புகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசியலில் புதிய சக்தியாகக் களம் இறங்கியுள்ள விஜய், ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப் பல்வேறு தடைகளைச் சந்தித்த நிலையில், காரைக்குடி பரப்புரைக்கு அனுமதி கிடைத்துள்ளது அவரது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை, மதுரை எனத் தீவிரமாகச் சுழன்று வரும் விஜய், நாளை காரைக்குடியில் தனது அதிரடிப் பேச்சின் மூலம் சிவகங்கை மாவட்ட அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை முன்னிட்டு காரைக்குடி நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!