தனிப்பட்ட விவகாரத்தில் சதி ... முதன் முறையாக விவாகரத்து பற்றி போட்டு உடைத்த விஜய்!

 
விஜய் சங்கீதா விஜய் சங்கீதா

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப். 09) திருநெல்வேலியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நீண்ட நாட்களாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்குப் பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த விஜய், இன்று முதல்முறையாகத் தனது பேச்சில் அந்த விவகாரத்தை மறைமுகமாகத் தொட்டுப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தனது மனைவி சங்கீதாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், "தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்புகிறார்கள்" என எதிர்க்கட்சிகளைச் சாடினார்.

நெல்லை பிரசாரத்தில் பேசிய விஜய், "என்னைப் பிடித்துப் போடப் பார்த்தார்கள், முடியவில்லை; தேர்தலுக்கு முன் எனது படத்தை முடக்கப் பார்த்தார்கள் (ஜனநாயகன்), அதுவும் எடுபடவில்லை. இப்போது என்னைத் தனிமைப்படுத்தவும், மக்கள் முன் வரவிடாமல் தடுக்கவும் புதிய கட்டுப்பாடுகளை (SOP) விதிக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, தேர்தலுக்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு என்னைச் சுற்றி இருப்பவர்களை வைத்து அவதூறு பரப்பச் சதி செய்கிறார்கள்" என ஆவேசமாகப் பேசினார். தனது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையைத் தேர்தல் நேரத்தில் அரசியல் ஆயுதமாக மாற்றச் சிலர் முயற்சிப்பதாகவும், மக்கள் தன் பக்கம் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அந்த மனுவில் விஜய்க்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அது தனக்கு மன உளைச்சலைத் தந்ததாகவும் அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விஜய் இன்று தனது பிரசார மேடையில் இதைப் பற்றிக் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விஜய்யின் இந்தப் பேச்சுக்கு ஒருபுறம் ஆதரவு பெருகினாலும், சமூக வலைதளங்களில் பலரும் தனிப்பட்ட விவகாரத்தை அரசியலோடு ஏன் இணைக்கிறார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!