அரசியல் களம் மாறியது: மாணிக்கம் தாகூரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய பிரபாகரன்!

 
தேமுதிக தேமுதிக

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட மாணிக்கம் தாகூரும், விஜய பிரபாகரனும் தற்போது ஒரே கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், மதுரையில் நடந்த இவர்களது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது திமுக கூட்டணியின் அங்கமாக இருவரும் கைகோர்த்துள்ளனர். விஜய பிரபாகரன் தனது தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாகத் திருநகரில் உள்ள மாணிக்கம் தாகூர் அலுவலகத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விஜய பிரபாகரன்

இந்தச் சந்திப்புக் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று நமது அலுவலகத்திற்கு வருகை தந்து சந்தித்தார்; அவர் மாபெரும் வெற்றி பெற இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்கும்" என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராகுல் காந்தியின் ஆசியுடன் விருதுநகரில் விஜய பிரபாகரனின் வெற்றி உறுதி செய்யப்படும் என்றும் அவர் அந்தப் பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 தேமுதிக 2026ல் கூட்டணி திமுகவா, தவெகவா?...  விஜய பிரபாகரன் பரபரப்பு பதில் !  

விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள விஜய பிரபாகரன், தனது தந்தையைப் போலவே மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஒருகாலத்தில் தேர்தல் களத்தில் மோதிக்கொண்ட இரு தலைவர்களும், தற்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துத் தேர்தல் வெற்றிக்காக இணைந்து செயல்படுவது கூட்டணியின் பலத்தை அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இந்த மண்ணில், தர்மத்தின் அடிப்படையில் வெற்றி கிட்டும் எனத் தொகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!