விஜய் தாக்குதல்… அதிமுக பதிலடி ... தமிழக அரசியலில் பரபரப்பு!

 
vijay

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சித் தலைவர் நடிகர் விஜய் அதிமுகவை நேரடியாக கடுமையாக விமர்சித்தார். முன்னாள் ஆட்சியாளர்களை “ஊழல் சக்தி” என குறிப்பிட்ட அவர், பாஜகவுக்கு அடிமையாக இருந்ததாக குற்றம்சாட்டினார். திமுக, அதிமுக இரு கட்சிகளும் அண்ணாவின் கொள்கைகளை மறந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், இனி தமிழகத்தை ஆளக்கூடாது என்றும் முழங்கினார்.

இதற்கு அதிமுக தரப்பில் உடனடியாக கடும் எதிர்வினை வெளியானது. கட்சியின் ஐடி விங், “நடிகர் விஜய்தான் பெரிய ஊழல்வாதி” என பதிலடி கொடுத்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, விஜய்யின் பேச்சுகளை கடுமையாக விமர்சித்தார். அரசியலுக்கு புதிதாக வந்தவர் எங்களை தாக்குவதாகவும், தவெக நீண்ட நாட்கள் நிலைக்காது என்றும் கூறினார்.

விஜய்யின் அரசியல் பேச்சுகள் “வாயில் வடை சுடுவது” போன்றவை என செல்லூர் ராஜு கிண்டலடித்தார். ஒவ்வொரு வீட்டிலும் தவெக வாக்கு இருப்பதாக அவர் எப்படி கணக்கெடுத்தார் என கேள்வி எழுப்பினார். நடிகர் மாஸ் காரணமாகவே கூட்டம் கூடுகிறது என்றும், சினிமா பில்டப் போல அரசியல் நடக்காது என்றும் விமர்சித்தார். இந்த மோதல் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!