அடுத்தடுத்து கெத்து காட்டும் விஜய்... 5 மண்டலங்களில் தவெக பூத் கமிட்டி மாநாடு!

 
 தவெக

தவெக அரசியல் கட்சியை அதன் தலைவர்  2026 தேர்தலை கருத்தில் கொண்டு அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவரது ஜனநாயகன் கடைசி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சிறிது நாட்களில் நிறைவடைய உள்ளது.

தவெக

இந்நிலையில், அதன் பின்னர் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் 28ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிலையில்  தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தவெக
இந்நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாட்டை 5 மண்டலங்களில் நடத்த அக்கட்சியின் தலைமை திட்டமிட்டு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில்  மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு, டெல்டா மண்டலம் என 5 மண்டலங்களாக பிரித்து பூத் கமிட்டி மாநாட்டை நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பூத் கமிட்டி மாநாடு முடிந்தபின் தங்கள் கட்சியின் முழு பலம் அனைவருக்கும் தெரியவரும் என விஜய் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web