விஜய் கூட்டத்தில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு... உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

 
சேலம்

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பரிதாப சம்பவம் நடந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வடமாநில வெள்ளி தொழிலாளி சுராஜ் திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காலை 11.20 மணிக்கு பிரேத பரிசோதனை தொடங்கியது. ஒரு மணி நேரம் நடைபெற்ற உடற்கூறாய்வுக்குப் பிறகு அறிக்கை தயாரிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கடும் மனவேதனையில் இருந்தனர்.

இதுவரை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யாரும் வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். கட்சியின் சார்பில் நிதி உதவி அறிவிக்கப்படும் வரை உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சுராஜ் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஆஞ்சியோ சிகிச்சை செய்திருந்தாலும் உடல்நிலை நன்றாகவே இருந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!