விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பா.ஜ.க.வின் பாசிசத் தன்மை... ஸ்டாலின் கடும் கண்டனம்!

 
ஸ்டாலின் மோடி

தமிழகத்தில் இதழியல் ஊடகத்துறையில்  100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது விகடன் குழுமம். இந்நிலையில் இணையத்தளம் முடக்கப்பட்டு இருப்பது  அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பிரதமர்  மோடியை விமர்சிக்கும் கார்ட்டூனை வெளியிட்டதற்காக, விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.


இந்த கார்ட்டூன் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு புகார் அளித்ததாகவும், அதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இணையதளம் முடக்கம் செய்யப்பட்டது குறித்து விகடன் தரப்பில்   ” கருத்து சுதந்திரம் எங்களின் அடிப்படை நிலைமை. எப்போதும் அதற்காகவே குரல் கொடுத்தோம். இனிமேலும் கொடுப்போம். எங்களுடைய இணையதளம் முடக்கம் செய்யப்பட்டது. எதற்காக முடக்கம் செய்யப்பட்டது? என்பது குறித்து பார்த்து வருகிறோம். இந்த முடக்கம், உண்மையாகவே அரசின் நடவடிக்கை என்றால், அதை சட்டப்படி எதிர்க்க தயாராக இருக்கிறோம். எதிர்ப்புகள் வந்தாலும், உண்மையை பேசுவதை நிறுத்தமாட்டோம். இணையதளம் விரைவில் மீண்டும் செயல்படும்” எனவும் விகடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web