பெரும் பரபரப்பு... விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை!
Jul 4, 2025, 10:20 IST

சென்னை அடுத்த திருநின்றவூரில் வசித்து வருபவர் விசிக பெண் கவுன்சிலர் கோமதி. இவர் 26 வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது கணவர் ஸ்டீபன்ராஜ். இவர்களுக்கு 4 குழந்தைகள்.
இந்நிலையில், கோமதி அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற ஸ்டீபன்ராஜ், கோமதியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல்நிலையத்தில் சரணடைந்து விட்டார்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை மீறிய உறவு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!