கடும் எதிர்ப்புக்கு இடையில் காந்தி பெயர் நீக்கம்… ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ மசோதா நிறைவேற்றம்!
2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கோடிக்கணக்கான கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை வழங்கும் இந்தத் திட்டம், 20 ஆண்டுகளாக மத்திய அரசின் முழு நிதியுடன் செயல்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் பெயரை மாற்றி ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த புதிய மசோதாவில், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வேலை நாட்கள் 100-இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டு இந்தி பெயர் சூட்டப்படுவதை எதிர்த்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் தீவிர விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு, மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதன் மூலம், காந்தி பெயர் நீக்கப்பட்ட வேலைத் திட்டம் புதிய பெயரில் அமலுக்கு வர உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
