ரூ4.5லட்சம்... சாக்லேட் நிறுவன ஆபரை மறுத்த வில்லேஜ் குக்கிங் சேனல்... வைரல் வீடியோ... !

 
வில்லேஜ் குக்கிங்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில்   உலக வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு   நடைபெற்று வருகிறது.நேற்று  ஜனவரி 7ம் தேதி முதல்வர் இந்த  மாநாட்டை  தொடங்கி வைத்தார்.   இந்த மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அங்கு பார்வையாளர் கருத்தரங்கும்  தொழில் முதலீட்டர்களுடனான நேர்காணலும் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதனை நேரில் காணவும், அவர்களிடையே கருத்துக்களை தெரிவிக்கவும்  மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


 


இந்த நேர்காணலில் சமையல் கலை வீடியோக்கள் மூலம் பிரபலமாகியுள்ள  வில்லேஜ் குக்கிங் சேனலும் கலந்து கொண்டது.இந்த குழுவிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.  அவர்களிடம் உங்கள் சேனலில் விளம்பரம் செய்ய தனியார் சேனல்கள்  அணுகியுள்ளனரா என   கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு அவர்கள் ஆம், எங்களை ஒரு முன்னணி சாக்லேட் நிறுவனம் விளம்பரத்திற்கு அணுகியது. நாங்கள் முடியாது என கூறிவிட்டோம் என பதில் அளித்தனர்.  இது குறித்த விளக்கத்தில் “ நாங்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்கும் போதே ஒரு கொள்கை வைத்து இருந்தோம்.  விளம்பரத்திற்காக யாரிடமும் காசு வாங்க கூடாது என கட்டுப்பாடு வைத்து இருந்தோம்.

வில்லேஜ் குக்கிங்

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்கு கூட நாங்க காசு வாங்கவில்லை. ஒருவரிடம் காசு வாங்கினால் அதற்காக எங்கள் விடியோவில் ஒரு நிமிஷம் ஒதுக்க வேண்டும். எங்கள் சேனலை பார்க்கும் பார்வையாளர்கள் அதனை கட்டாயமாக பார்க்கும் சூழல் உருவாகும்.ஒரு முன்னணி சாக்லேட் நிறுவனம்,  5 மில்லியன் பாலோயர்ஸ் இருந்த போது   10 வினாடி விளம்பர வீடியோ பதிவிட 4.5 லட்சம் ரூபாய் தருவதாக கூறினர். தற்போது எங்களிடம் 22 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர்.  இப்போது இன்னும் அதிகமாக தருவார்கள். ஆனால் அப்போதே விளம்பரங்கள் வேண்டாம் என தவிர்த்து விட்டோம் .   சமையல் கலையை 1 நிமிஷத்திற்குள் சொல்ல முடியல. அதனால் தான் தற்போது வரை ஷார்ட்ஸ்  வீடியோ பதிவிடவில்லை என வில்லேஜ் குக்கிங் சேனல் சார்ந்தவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேர்காணலில் கூறியுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web